பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா? (what a pity)
நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
No comments:
Post a Comment