நிஜமாதான் சொல்றீங்களா டாக்டர்? என் மனைவியைக் காப்பாத்த வழியே இல்லையா...?''
''யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்கலாம்... அதுக்காக நான் எத்தனை தடவை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டு இருக்கறது..?
--
டாக்டர்: உங்கள் கணவர் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்க மாத்திரைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
மனைவி: அவருக்கு எத்தனை மாத்திரை தரவேண்டும்?
டாக்டர்: மாத்திரை அவருக்கல்ல, உங்களுக்கு.
--
ஒரு டாக்டரும், ஆலோசனை அதிகாரியும் சந்தித்துக் கொண்டபோது, ஆலோசனை அதிகாரி சொன்னார். எனது வேலை ரொம்ப ஜாலியானது. என்னிடம் வருபவர்கள் தங்கள் குறைகளை சொல்லி விட்டு ஆலோசனைக்காக பணமும் தந்துவிட்டுப் போகிறார்கள்.
டாக்டர் சொன்னார்„ இது என்ன பிரமாதம் என்னிடம் வருபவர்கள் தங்கள் குறைகளை சொல்வதோடு ஆடைகளையெல்லாம் கழற்றி வைத்து விட்டல்லவா பணம் கொடுத்துவிட்டுப் போகிறார்கள்.
--
கண்டிப்பா அவர் போலி டாக்டர்தான்னு எப்படி அடிச்சு சொல்றே?
அப்புறம் என்னடி குழந்தை இல்லைன்னு கண்ஷல்டேஷனக்கு வந்தால், ஏதாவது ஆசிரமத்துக்குப் போயி சாமியாரைப் பாருங்கன்னு சொல்றாரு.
--
நோயாளி: பிராந்திக்கடை ஏலம் எடுக்கற மாதிரியே கனவு வருது டாக்டர்?
டாக்டர்: அது மன பிராந்திதான் வேற ஒன்னுமில்லை.
*******************
ஒருவர்: அவர் குழந்தைகளை கவ னிக்கிற டாக்டர்ன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?
மற்றவர்: மம்மு சாப்பிடறதுக்கு முன்னாடி இந்த மருந்தையும், மம்மு சாப்பிட்ட பிறகு இந்த மருந்தையும் சாப்பிடுங்கன்னு சொன்னாரே...
ஒருவர்: எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?
டாக்டர்: ஏன்?
முதலாமவர்: என் மனைவியை திட்ட வேற வழி தெரியலை டாக்டர்
--
சினிமா தியேட்டர் வாசலில் ஒருவர்: ஏன் இந்த ஆம்புலன்ஸை இங்கே எடுத்து வந்து நிறுத்தியிருகீங்க? யாராவது போன் பண்ணி வரச்சொன்னாங்களா?
மருத்துவமனை ஊழியர்: டாக்டர்தான் பேஷண்ட்டை சீக்கிரமா தியேட்டருக்கு அழைச்சிட்டுப் போ. பின்னாலேயே வந்திடறேன்னு சொன் னாரு. அதான் பேஷண்ட்டை அழைச்சி வந்திருக்கேன்.
--
டாக்டர்; ஒரு சின்ன சந்தேகம், கேட்டா தப்பா நினைக்கக் கூடாது;
நோயாளி: கேளுங்கள் டாக்டர் ஐயா
டாக்டர்; ஆப்ரேசனுக்கு அப்பறம் நான் பீசை யார்கிட்ட போய் வங்கறது?
--
''ஊசிபோட்ட பிறகு எதுக்கு டாக்டர்
ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க? இல்ல' உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னு
பாக்க ஆசையா இருக்கு...
--
"என் தாத்தாவுக்க 100 வயசு ஆகிறது ஆனா
இதுவரைக்கும் டாக்டர்கிட்டே போனதே கிடையாது...
நீங்க 100 வயசுன்னு சொல்லும் போதே நினைச்சேன்!
--
"நீங்க தான் டிஸ்சார்ஜ் ஆயாச்சே, இன்னும்ஏன் வீட்டுக்குப் போகாம இங்கேயே இருக்கீங்க
"பஸ் சார்ஜ் இல்ல டாக்டர் ''!
--
"ஏன் சிஸ்டர் திடிர்னு எனக்கு ஆப்ரேஷன்
வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டார்?
"டாக்டருக்கு திடிர்னு
வேற இடத்தில் இருந்து பணம் வந்துட்டதாம்!
--
"டெம்பரேச்சர் தாறுமாறா இருக்கே....!''
நேத்து வெச்ச தெர்மாமீட்டர் டாக்டர்
நர்ஸ் எடுக்க மறந்துட்டாங்க.....!''
--
என்னங்க ஆபரேஷன் பண்றதுக்குள்ளேயே தியேட்டர்லேருந்து பச்சை ட்ரெஸ்ஸோட ஓடியாந்துட்டீங்க..?
இல்லே.. நர்ஸ் சொன்னாங்க.. இது சின்ன ஆபரேஷந்தான்.. டென்ஷன் ஆகாதீங்க..கடவுள் இருக்கார்.. அப்படின்னு..
சரி.. அதுக்கு எதுக்கு ஓடி வந்தீங்க..? தைரியம் தானே சொல்லியிருக்காங்க..
தைரியம் சொன்னது எனக்கு இல்லே.. டாக்டருக்கு..!
--
ஒரு செல்வந்தர் அபாயகரமான நோயிலிருந்து ஒரு மருத்துவரால் காப்பாற்றப்பட்டார். மருத்துவ மனையிலிருந்து புறப்படும்போது...
செல்வர் ; டாக்டர்.. நீங்கள் என் தெய்வம்.. எனக்கு உயிர் கொடுத்தவர்.. உங்களுக்கு மருத்துவக் கட்டணம் என்ற பெயரில் ஒரு சிறு தொகையைக் கொடுத்து உங்களை சிறுமைப் படுத்த விரும்பவில்லை.. நான் நேற்று எழுதிய உயிலில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு ஒரு சொத்து எழுதியுள்ளேன்.. இது என் காணிக்கை.
மருத்துவர் ; இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்..? சரி.. இனி தாங்கள் சாப்பிடவேண்டிய மருந்துப் பட்டியல் ஒன்று தந்தேன் அல்லவா..? அதைக் கொஞ்சம் கொடுங்கள்..
செல்வர் ; ஏன் டாக்டர்..?
மருத்துவர் ; ஒரு சிறு மாறுதல் செய்யவேண்டும்..!!!
--
வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில் இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.
மருத்துவர் மாவுக்கட்டு போட்டுவிட்டு " பாட்டி, இன்னும் 1 மாசத்துக்கு மாடிப் படி ஏறக்கூடாது.." என்று சொல்லிப் போனார்.
ஒரு மாதத்துக்குப் பின், மாவுக்கட்டை மருத்துவர் அகற்றும் போது பாட்டி கேட்டாள்..
டாக்டர்.. இனி படியில் ஏறலாமில்லையா..?
ஓ.எஸ்.. தாராளமா..
நன்றி டாக்டர்.. தண்ணி பைப்பை புடிச்சி மாடி ஏறுவது ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு..!!!
---
டாக்டர் : தினமும் கொஞ்சம் ஓடச் சொன்னது உண்மைதான். அதுக்காக என் பீஸைக் கொடுக்காமல் என்னைப் பார்த்தவுடனே ஓடினா எப்படி?
வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து வச்சுக்கிட்டு இருக்கீங்க?
டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து தருவாங்க.
--
ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :
"டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள் இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்."
--
டாக்டர் : உங்களுடைய நாடித் துடிப்பு ஒரே சீராக ஒரு கடிகாரத்தைப் போலவே இருக்கிறது.
நோயாளி : நீங்கள் இப்போது பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே என்னுடைய கைகடிகாரத்தைத்தான் டாக்டர்.
--
ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!
டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!
நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.
எல்லா ஜோக்ஸ்சும் சூப்பர்.. டாக்டருக்கே அபரேஷன் பண்ணிட்டீங்க போங்க..
ReplyDelete